இங்கிலாந்தின் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி கிரிக்கெட் தொடரின் ஒருநாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான போட்டியில் நார்த்தாம்டன்ஷையர் - துர்ஹாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற துர்ஹாம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய துர்ஹாம் அணியில் க்ரஹம் கிளார்க் 13, அலெக்ஸ் லீஸ் 34, பெடிங்ஹாம் 15, மைக்கேல் ஜோன்ஸ் 6, பெக்கினி 3, புஷெல் 32, பார்த்விக் 20, டிரெவஸ்கிஸ் 37, பிரிடோரியஸ் 20 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 43.2 ஓவர்கள் முடிவில் துர்ஹாம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நார்த்தாம்டன்ஷையர் அணி தரப்பில் புரொக்டர் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் சீல்ஸ், கியோக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.