
BAN vs AFG, 1st ODI: Bangladesh Pair Record 2nd Highest 7th Wicket Partnership In ODIs To Take Team (Image Source: Google)
வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நஜிபுல்லா ஸத்ரான் 67 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி தொடக்கத்திலேயே தமிம் இக்பால், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹிம், யாசிர் அலி, மஹ்முதுல்லா ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.