
BAN vs AFG, 3rd ODI:Afghanistan restricted Bangladesh by 192 runs (Image Source: Google)
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணியின் கேப்டன் தமிம் இக்பால் 11 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷகிப் அல் ஹசன் 30 ரன்களில் வெளியேறினார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய லிட்டன் தாஸ் அரைசதம் கடந்தார். இறுதியில் அவரும் 86 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.