
BAN vs AFG, 1st T20I: Bangladesh defeat Afghanistan by 61 runs (Image Source: Google)
வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தாக்கவில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 60 ரன்களைச் சேர்த்தார். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபருக்கி, அஸ்மதுல்லா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.