
BAN vs AFG, Asia Cup 2023: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஹைபிரீட் மாடலில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 4ஆவது போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஏற்கெனவே வங்கதேச அணி தொடரின் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணியும் சமீபத்தில் பாகிஸ்தானிடன் ஒருநாள் தொடரை இழந்த கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் அந்த அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான்
- இடம் - கடாஃபி மைதானம், லாகூர்
- நேரம் - மாலை 3 மணி (இந்திய நேரப்படி)