BAN vs AUS: ஆஸ்திரெலிய பந்துவீச்சில் ரன்களில் சுருண்ட வங்கதேசம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங்செய்த வங்கதேச அணி 132 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசம் - ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி சௌமியா சர்கா 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது நைம் - ஷகிப் அல் ஹசன் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது.
Trending
பின் 30 ரன்களில் நைம் ஆட்டமிழக்க, 36 ரன்களில் ஷாகிப் அல் ஹசனும் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்கைளில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now