Advertisement
Advertisement
Advertisement

வங்கதேசம் vs இலங்கை, முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

வங்கதேச - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.

Advertisement
வங்கதேசம் vs  இலங்கை, முதல் டி20  - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் vs இலங்கை, முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 03, 2024 • 11:16 PM

இலங்கை அணி இம்மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்ட் டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவதாக வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது மார்ச் 04ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டில் சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 03, 2024 • 11:16 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - வங்கதேசம் vs இலங்கை
  • இடம் - சர்வதேச கிரிக்கெட் மைதானம், சில்ஹெட்
  • நேரம் - மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

சில்ஹேட்டில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் வரலாற்றில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. அதேபோல் இங்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஆதரவு இருக்கும். இதனால் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சரசாரியானது 149 ஆக உள்ளது. இதன் காரணமாக போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீசுவது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை 

வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காணலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 13
  • இலங்கை - 09
  • வங்கதேசம் - 04

உத்தேச லெவன்

வங்கதேசம்: முகமது நைம், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), தாவ்ஹித் ஹிரிடோய், சௌமியா சர்க்கார், மஹேதி ஹசன், மஹ்முதுல்லா, தைஜுல் இஸ்லாம், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் ஷாகிப், அல் இஸ்லாம்.

இலங்கை: அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மேத்யூஸ், வனிந்து ஹசரங்க (கே), சரித் அசலங்க, மஹீஷ் தீக்ஷனா, நுவான் துஷார, பினுர ஃபெர்னாண்டோ, மதீஷா பத்திரனா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - லிட்டன் தாஸ், குசல் மெண்டிஸ்
  • பேட்டர்ஸ்  - தாவ்ஹித் ஹிரிடோய், அவிஷ்கா ஃபெர்னாண்டோ, முகமது நைம்
  • ஆல்ரவுண்டர்கள் - வனிந்து ஹசரங்க, மஹேதி ஹசன், ஏஞ்சலோ மேத்யூஸ்
  • பந்துவீச்சாளர்கள் - தில்ஷான் மதுஷங்க, தைஜுல் இஸ்லாம், மஹீஷ் தீக்ஷனா.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement