
BAN vs SL, 1st Test: Mathews notches ton as Sri Lanka start strong in Chattogram (Image Source: Google)
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் திமுத் கருணரத்னே 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஒஷாதா ஃபெர்னாண்டோ - குசால் மெண்டிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.