Advertisement

வங்கதேசம் vs இலங்கை, இரண்டாவது ஒருநாள் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 17, 2024 • 20:33 PM
வங்கதேசம் vs  இலங்கை, இரண்டாவது ஒருநாள்  - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் vs இலங்கை, இரண்டாவது ஒருநாள் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணியும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - வங்கதேசம் vs இலங்கை
  • இடம் - ஜாஹூர் அகமது சவுத்ரி மைதானம், சட்டோகிராம்
  • நேரம் - மதியம் 2 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. அதேபோல் இங்கு குறைந்த அளவிலான பவுன்ஸ் மட்டுமே கிடைக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் ஆதரவு இருக்கும். இதனால் இந்த மைதானத்தில் ரன்களைச் சேர்ப்பது கடினமாக பார்க்கப்படுகிறது. மேலும் நின்று விளையாடும் பேட்டர்களால் ரன்களைச் சேர்க்க முடியும். இதனல் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீசுவது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை 

வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காணலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 56
  • இலங்கை - 43
  • வங்கதேசம் - 11
  • முடிவில்லை - 02

உத்தேச லெவன்

வங்கதேசம்: தன்ஸித் ஹசன், சௌமியா சர்க்கார், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), தாவ்ஹித் ஹிரிடோய், முஷ்ஃபிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத், ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாஃபிசூர் ரஹ்மான்

இலங்கை: பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் (கே), சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, ஜனித் லியானகே, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலாகே, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: குசல் மெண்டிஸ், முஷ்ஃபிக்கூர் ரஹீம்
  • பேட்டர்ஸ்: நஜ்முல் ஹொசைன் சாண்டோ, சரித அசலங்கா, பதும் நிஷங்கா
  • ஆல்ரவுண்டர்கள்: சௌமியா சர்கார், வனிந்து ஹசரங்கா, மெஹிதி ஹசன் மிராஸ், ஜனித் லியானகே, துனித் வெல்லலாகே
  • பந்து வீச்சாளர்கள்: ஷோரிஃபுல் இஸ்லாம்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement