BAN vs SL: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இதில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் வங்கதேச அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் தாக்காவில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் தமிம் இக்பால் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான வங்கதேச அணியில் முகமது மிதுன், டஸ்கின் அஹ்மது ஆகியோருக்கு பதிலாக மொசாடெக் ஹொசைன், ஷெரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் இலங்கை அணி எந்தவித மாற்றங்களும் இன்றி களமிறங்குகிறது.
வங்கதேசம்: தமீம் இக்பால் , லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம் , மொசாடெக் ஹொசைன், முஹ்மதுல்லா, அஃபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன், முகமது சைபுதீன், ஷெரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசூர் ரஹ்மான்.
இலங்கை: குசல் பெரேரா, தனுஷ்கா குணதிலகா, பாதும் நிசங்கா, குசால் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, தாசுன் ஷானகா, ஆஷென் பண்டாரா, வனிந்து ஹசரங்கா, இசுரு உதனா, லக்ஷன் சண்டகன், துஷ்மந்தா சமீரா.
Win Big, Make Your Cricket Tales Now