Advertisement

WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் 7ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan February 28, 2024 • 22:29 PM
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலபப்ரீட்சை நடத்துகிறது. இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதேசமயம் மறுபக்கம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஒரு தோல்வி, ஒரு வெற்றியைப் பெற்றுளது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் -  இரவு 7.30 மணி 

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 00
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 02

பிட்ச் ரிப்போர்ட்

இத்தொடரின் முதல் பாதி லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூருவிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக இந்த மைதானத்தில் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்க முடியும். மேலும்  இங்கு நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளிலுமே இறுதிப்பந்து வரை சென்றுள்ளதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் உறுதியாக நம்பலாம்.

உத்தேச லெவன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஸ்மிருதி மந்தனா (கே), சோஃபி டிவைன், எஸ் மேகனா, எலிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், சோஃபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஸ்ரேயங்கா பாட்டீல், சிம்ரன் பகதூர், எஸ் ஆஷா, ரேணுகா தாக்கூர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: மெக் லானிங் (கே), ஷஃபாலி வர்மா, ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஸான் கேப், அனாபெல் சதர்லேண்ட், அருந்ததி ரெட்டி, மின்னு மணி, தனியா பாட்டியா, ராதா யாதவ், ஷிகா பாண்டே.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ்: மெக் லானிங், ஸ்மிருதி மந்தனா(கே), ஜெமிமா ரோட்ரிக்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: சோஃபி டெவின், மரிசான் கேப்(துணைக்கேப்டன்), சோஃபி மோலினக்ஸ், ஆலிஸ் கேப்ஸி
  • பந்துவீச்சாளர்கள்: ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஆஷா சோபனா

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement