Advertisement Amazon
Advertisement

WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 01, 2024 • 22:04 PM
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலபப்ரீட்சை நடத்துகிறது. இந்த சீசனில் இரு அணிகளும் விளையாடிய மூன்று போட்டிகளின் முடிவில் தலா 2 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் நீடித்து வருகின்றனர். இந்த சீசனில் சமபலத்துடன் இருக்கும் இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.  

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் vs மும்பை இந்தியன்ஸ் மகளிர்
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் -  இரவு 7.30 மணி 

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 0ஒ
  • மும்பை இந்தியன்ஸ் - 02

பிட்ச் ரிப்போர்ட்

இத்தொடரின் முதல் பாதி லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூருவிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக இந்த மைதானத்தில் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்க முடியும். மேலும்  இங்கு நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளிலுமே இறுதிப்பந்து வரை சென்றுள்ளதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் உறுதியாக நம்பலாம்.

உத்தேச லெவன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஸ்மிருதி மந்தனா (கே), சோஃபி டிவைன், சப்பினேனி மேகனா, ரிச்சா கோஷ், நாதின் டி கிளர்க், ஜார்ஜியா வேர்ஹாம், சோஃபி மோலினக்ஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா சோபனா, ரேணுகா தாக்கூர் சிங், சிம்ரன் பகதூர்,

மும்பை இந்தியன்ஸ்: ஹீலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), அமெலியா கெர், பூஜா வஸ்த்ரேகர், அமன்ஜோத் கவுர், எஸ் சஜனா, கீர்த்தனா பாலகிருஷ்ணன், ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: யாஷ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ்: ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள்: சோஃபி டிவைன், ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), அமெலியா கெர், நாதின் டி கிளர்க், சோஃபி மோலினக்ஸ்
  • பந்து வீச்சாளர்: ஷப்னிம் இஸ்மாயில்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement