ஆசிய கோப்பை 2023: வங்கதேச அணியிலிருந்து வெளியேறிய லிட்டன் தாஸ்!
ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் வைரஸ் காய்ச்சல் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் (50 ஓவர்) இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.
இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகள் மற்றொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. இன்று பாகிஸ்தானில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் ஆகிய அணிகள் மோத உள்ளன.
Trending
இந்நிலையில் வங்கதேச அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக வங்கதேச அணியில் 30 வயதான விக்கெட் கீப்பர்-பேட்டர் அனமுல் ஹக் பிஜோய் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
வங்கதேச அணி தனது தொடக்க ஆட்டத்தில் நாளை இலங்கையை சந்திக்க உள்ளது. இந்நிலையில் லிட்டன் தாஸ் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகி உள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வங்கதேச அணி: ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்),தன்ஜித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், முஷ்ஃபிகூர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், டஸ்கின் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஹசன் மம்ஹூத், மஹேதி ஹசன், நசும் அகமது, ஷமிம் ஹொசைன், ஆபிப் ஹொசைன், ஷோரிபுல் இஸ்லாம், எபடோட் ஹொசைன், முகமது நைம்,அனமுல் ஹக் பிஜோய்.
Win Big, Make Your Cricket Tales Now