
Bangladesh Dedicate Zimbabwe Test Win To Mahmudullah, Says Shadman Islam (Image Source: Google)
வங்கதேச அணி ஜிப்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களை குவித்து அசத்திய மஹ்முதுல்லா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து பேசிய அந்த அணியின் வீரர் சாதம் இஸ்லாம்,“இப்போட்டி மஹ்முதுல்லாவின் கடைசி டெஸ்ட் போட்டி என்பதை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தோம். அதன் காரணமாக இதனை வெல்லவேண்டும் என்ற உத்வேகத்துடன் நாங்கள் விளையாடினோம்.