டி20 கிரிக்கெட்டிற்கு ரெஸ்ட் கொடுக்கும் தமிம் இக்பால்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஆறுமாதங்களாவது விலக நினைக்கிறேன் என வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மேலும் இத்தொடரைன் 1-1 என்ற கணக்கில் சமன்செய்தும் அசத்தியதும்
இத்தொடருக்கு முன்னதாக வஙகதேச அணியின் நட்சத்திர வீரர் தமிம் இக்பால் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். அதற்கு முன்னும் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
Trending
இந்நிலையில் தற்போது 6 மாதங்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விலகி ஓய்வெடுக்கவுள்ளதாக புதிய அதிர்ச்சியை ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தமிம் இக்பால், “எனது டி20 எதிர்காலம் குறித்து விவாதங்கள் நடந்தன. கடந்த சில நாட்களாக, நான் பிசிபி தலைவர் (நஸ்முல் ஹாசன்) மற்றும் ஜலால் யூனுஸ் மற்றும் காசி இனாம் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தி வருகிறேன்.
இந்தாண்டு உலகக் கோப்பை வரை நான் டி20 போட்டிகளில் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். எனக்கு வேறு மாதிரியான சிந்தனை இருந்தது. அடுத்த ஆறு மாதங்களுக்கு டி20 போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். எனது முழு கவனம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணிக்காக இதுவரை 74 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தமிம் இக்பால் 1,758 ரன்களையும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now