
Bangladesh secure an unassailable 2-0 ODI series lead against Afghanistan (Image Source: Google)
வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி லிட்டன் தாஸ், முஷ்பிக்கூர் ரஹீம் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 306 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 136 ரன்களையும், முஷ்பிக்கூர் ரஹீம் 86 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபரீத் அஹ்மத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.