
Bangladesh thump Zimbabwe and clinch the one-off Test by 220 runs. (Image Source: Google)
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. கடந்த ஜூலை 7ஆம் தேதி ஹராரேவில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு மஹ்முதுல்லா, டஸ்கின் அஹ்மத், லிட்டன் தாஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 468 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா 150 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி 276 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை முடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கைடானோ 87 ரன்களையும், டெய்லர் 81 ரன்களை எடுத்திருந்தனர்.