Advertisement

வங்கதேசம் vs இலங்கை, மூன்றாவது ஒருநாள் : போட்டி முன்னோட்டம் & பேண்டஸி லெவன் குறிப்பு!

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (மே 28) நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 26, 2021 • 13:40 PM
Bangladesh vs Sri Lanka, 3rd ODI – Prediction, Fantasy XI Tips & Probable XI
Bangladesh vs Sri Lanka, 3rd ODI – Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Advertisement

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கெனவே முடிந்துள்ள முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணி அபார வெற்றிகளை பெற்று, இலங்கை அணிக்கெதிரான முதல் முறை ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (மே 28) தாக்காவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலாவது இலங்கை அணி வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

Trending


போட்டி தகவல்கள்

  • தேதி : மே 28, 2021, வெள்ளிக்கிழமை
  • நேரம் : மதியம் 12.30 மணி 
  • மைதானம்: ஷேர் பங்களா தேசிய மைதானம், தாக்கா.

போட்டி முன்னோட்டம்

வங்கதேசம்

தமிம் இக்பால் தலைமையிலான வங்கதேச அணி முதல் முறையாக இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

அதிலும் நேற்றைய போட்டியில் நட்சத்திர வீரர் முஷ்பிக்கூர் ரஹீமின் அபார சதம் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. பந்துவீச்சில் முஸ்தபிசூர் ரஹ்மான், மெஹதி ஹசன் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு எதிரணி ரன் வேகத்தை தடுத்து நிறுத்தினர். 

நாளை நடைபெறும் போட்டியில் இவர்களது ஃபார்ம் சிறப்பாக அமையும் பட்சத்தில், வங்கதேச அணி, இலங்கையை ஒயிட் வாஷ் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

இலங்கை

அணியில் குசால் பெரெரா, குசால் மெண்டிஸ், குனத்திலகா உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், அவர்கள் சோபிக்க தவறியதால் ஒருநாள் தொடரை இலங்கை அணி இழந்துள்ளது. 

அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பந்துவீச்சில் சமீரா, தனசெயா ஆகியோரது பந்துவீச்சு அமைந்திருந்தது. ஒருவேளை நாளைய போட்டியில் இலங்கை அணி தோற்கும் பட்சத்தில் வங்கதேச அணியிடம் ஒயிட் வாஷ் ஆகும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. 

இதனால் அனுபவ வீரர்கள் இல்லாத இலங்கை அணி பொறுப்பை உணர்ந்து ஆறுதல் வெற்றியையாவது பெறுமா என்ற எதிர்பார்பில் ரசிகர்கள் உள்ளனர்.

உத்தேச அணி

வங்கதேசம்: தமீம் இக்பால் , லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம் , மொசாடெக் ஹொசைன், முஹ்மதுல்லா, அஃபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன், முகமது சைபுதீன், ஷெரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசூர் ரஹ்மான்.

இலங்கை: குசல் பெரேரா, தனுஷ்கா குணதிலகா, பாதும் நிசங்கா, குசால் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, தாசுன் ஷானகா, ஆஷென் பண்டாரா, வனிந்து ஹசரங்கா, இசுரு உதனா, லக்ஷன் சண்டகன், துஷ்மந்தா சமீரா.

ஃபேண்டஸி லெவன் குறிப்பு

  • விக்கெட் கீப்பர்கள் - முஷ்ஃபிகூ ரஹீம், குசல் பெரேரா
  • பேட்ஸ்மேன்கள் - தமீம் இக்பால், மஹ்மதுல்லா, பதும் நிசங்கா, 
  • ஆல்ரவுண்டர்கள் - ஷாகிப் அல் ஹசன், வாணிந்து ஹசரங்கா, தனஞ்சய டி சில்வா
  • பந்து வீச்சாளர்கள் - மெஹிடி ஹசன் மிராஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், லக்ஷன் சண்டகன், துஷ்மந்தா சமீரா


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement