
Bangladesh will host New Zealand for a five-match T20I series from 1 to 10 September. (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய இடங்களில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் வங்கதேசம்-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நடைபெறவிருந்தன.
இந்நிலையில் இந்தத் தொடர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் இணைந்து ஒத்திவைப்பதாக இன்று அறிவித்துள்ளது. இந்தத் தொடர்களை ஒத்திவைக்க இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்தே முடிவெடுத்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.