ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு இரண்டு புதிய நம்பிக்கைகள் கிடைத்துள்ளன - எம் எஸ் தோனி!
சிஎஸ்கே அணியின் கடைசிப் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து எம்.எஸ்.தோனி நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியில் நேற்று ராஜஸ்தான் அணியிடம் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்களை சேர்த்தது. இதன்பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
Trending
சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் வீரர்கள் ருதுராஜ் கெயிக்வாட் 2 ரன்களுக்கும், டெவோன் கான்வே 16 ரன்களுக்கும் அவுட்டாகி ஏமாற்றினர். இதன்பின்னர் வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். எனினும் பொறுப்புடன் ஆடிய மொயீன் அலி 57 பந்துகளில் 93 ரன்களும், கேப்டன் தோனி 28 பந்துகளில் 26 ரன்களையும் சேர்த்தனர். இதனல் 150 ரன்கள் குவிக்க முடிந்தது.
151 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஓப்பனிங் வீரர் ஜாஸ் பட்லர் 2 ரன்கள், சஞ்சு சாம்சன் 15, தேவ்தத் பட்டிக்கல் 15 என விக்கெட்டை பறிகொடுத்தனர். மற்றொரு தொடக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஷ்வால் பொறுப்புடன் ஆடி 59 ரன்களை சேர்த்தார். 112 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது அஸ்வின் 23 பந்துகளில் 40 ரன்களை விளாசி அசத்தினார். இதனால் சுலபமாக வெற்றி கண்டது.
சென்னை அணியின் தோல்வி குறித்து பேசிய தோனி, "நாங்கள் பேட்டிங்கில் சற்று பின் தங்கியுள்ளோம் என்பதை உணர வேண்டும். முன்கூட்டியே விக்கெட்டுகள் சரிந்த போது, மொயீன் அலி பொறுப்புடன் ஆடி காப்பாற்றினார். ஆனால் அந்த சமயத்தில் மற்றொரு விக்கெட் சென்றிருந்தால், இந்த இலக்கை கூட எங்களால் நிர்ணயித்திருக்க முடியாது. இதனையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
15 ரன்கள் வரை நாங்கள் குறைவாக அடித்துவிட்டோம். ஆட்டத்தில் தொடக்கம் சரியில்லை என்றால் 180 ரன்கள் அடித்தாலும், அதனை கட்டுப்படுத்த முடியாது. நடப்பு சீசனில் முகேஷ் சௌத்ரி ஒவ்வொரு ஆட்டத்தில் இருந்து பல விஷயங்களை நன்கு கற்றுக்கொண்டிருக்கிறார்.
இதே போல பதிரானாவும் மிகவும் சவால் கொடுக்கிறார். இவர்கள் அடுத்தாண்டு நிச்சயம் சிறப்பாக வருவார்கள். ஐபிஎல் ஒன்றும் ஓராண்டுடன் முடிவடைவது இல்லை. அடுத்தாண்டு கம்பேக் கொடுக்கலாம்" எனக் கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now