
ஐபிஎல் தொடரில் இன்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மிகப்பெரும் மோதல் நடைபெறவுள்ளது. 22வது லீக் ஆட்டமான இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.இந்த போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே மான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியனானா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்து மன வேதனையில் உள்ளது.
புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா இன்றைய போட்டியிலாவது அணியை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளார். மற்றொரு புறம் சிஎஸ்கேவின் நண்பர்கள் நிறைந்துள்ள ஆர்சிபி அணி பெரும் பலத்துடன் விளையாடுகிறது.
சிஎஸ்கேவின் தூணாக இருந்த டூப்ளசிஸ் தான் இன்று அதனை எதிர்க்கவுள்ளார். சிஎஸ்கேவின் பவுலிங் தூணாக இருந்த ஜோஸ் ஹாசல்வுட் இன்று ஆர்சிபிக்காக களமிறங்குகிறார். இதனால் இதே போல தோனியை குரு போன்று நினைக்கும் விராட் கோலி இன்று எதிர்க்கவுள்ளதால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு உள்ளது.