பிபிஎல் 2021: ரெனிகேட்ஸை பந்தாடியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஸ்டிரைக்கர்ஸ் அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக வெல்ஸ் 37 ரன்களையும், டி ஆர்சி ஷார்ட் 32 ரன்களையும் சேர்த்தனர். ரெனிகேட்ஸ் அணி தரப்பில் கேப்டன் கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணி எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 18.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 100 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now