
BBL 11: Hobert Hurricans defeat Melbourne Stars by 23 runs (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹாபர்ட் ஹரிக்கென்ஸ் அணி பென் மெக்டர்மோட்டின் அதிரடியான அரைசதத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக பென் மெக்டர்மோட் 67 ரன்களைச் சேர்த்தார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.