
BBL 11: Perth Scorchers beat Brisbane Heat by 6 runs (Image Source: Google)
பிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி பாட்டர்சனின் அதிரடியான அரைசதத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக குர்டிஸ் பாட்டர்சன் 55 ரன்களையும், எவன்ஸ் 33 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து இலக்கைத் துரத்திய பிரிஸ்பேன் அணியில் கிறிஸ் லின், பென் டக்கெட், பெர்சன், கூப்பர் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.