Advertisement

BBL 12: பிரிஸ்பேன் ஹீட்டை பந்தாடியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்!

பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 15, 2022 • 17:14 PM
BBL 12: Melbourne Renegades defeated Brisbane Heat by 22 runs!
BBL 12: Melbourne Renegades defeated Brisbane Heat by 22 runs! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிபிஎல் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணிக்கு நிக் மேடின்சன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மறுமுனையில் சாம் ஹார்பர் 11 ரன்களிலும், ஜேக், ஆரோன் ஃபிஞ்ச், ஜானதன் வெல்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Trending


இருப்பினும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிக் மேடின்சன் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய மேடின்சன் 49 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரிகள் மொத்தம் 87 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 சிக்சர்களுடன் 35 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர் இதனால் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை மட்டுமே சேர்த்தது. பிரிஸ்பேன் தரப்பில் மேத்யூ குனெமேன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணியில் தொடக்க வீரர்களான் ஜோஷ் பிரௌன் 7 ரன்களிலும், மேக்ஸ் பிரைண்ட் ரன் ஏதுமின்றியும், சாம் பில்லிங்ஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த காலின் முன்ரோ - ஜிம்மி பெர்சென் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.

இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட காலின் முன்ரோ 35 ரன்களிலும், ஜிம்மி பெர்சென் 43 ரன்களோடும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அதன்பின் ரோஸ் வைட்லே அதிரடியாக விளையாடி 28 ரன்களைச் சேர்த்தாலும் 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்தது.

மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தரப்பில் அகில் ஹொசைன் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement