Advertisement

பிபிஎல் 2021: மெக்டர்மோட் அபார சதம்; ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!

மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 29, 2021 • 17:31 PM
BBL 2021: Ben McDermott's ton helps Hurricans comfortable victory
BBL 2021: Ben McDermott's ton helps Hurricans comfortable victory (Image Source: Google)
Advertisement

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ரெனிகேட்ஸ் அணி பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய ஹரிகேன்ஸ் அணியில் தொடக்க வீரர் மேத்யூ வேட் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த டி ஆர்சி ஷார்ட், ஹேரி ப்ரூக், ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

Trending


இருப்பினும் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய பென் மெக்டர்மோட் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக பென் மெக்டர்மோட் 65 பந்துகளில் 9 சிக்சர், 9 பவுண்டரிகளை விளாசி 127 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியில் சாம் ஹார்பர் அரைசதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் 15.5 ஓவர்களிலேயே மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது. ஹரிகேன்ஸ் அணி தரப்பில் தாமஸ் ரோஜர்ஸ், சந்தீப் லமிச்சானே தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன்மூலம் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இப்போட்டியில் சதமடித்த பென் மெக்டர்மோட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement