
BBL 2021: Brisbane Heat defeat Adileide Strikers by 39 runs (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் அணியின் கிறிஸ் லின் 10, மேக்ஸ் பிரையண்ட் 32, டாம் கூப்பர் 16 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய பென் டக்கெட் - ஹஸெலெட் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் டக்கெட் அரைசதம் அடித்தார்.