
BBL 2021: Sydney Thunder defeat Brisbane Heat by 53 runs (Image Source: Google)
பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது போட்டியில் சிட்னி தண்டர் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சிட்னி அணியில் மேத்யூ கிக்ஸ் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் கிக்ஸ் 28 ரன்னிலும், ஹேல்ஸ் 35 ரன்னிலும், ஜேசன் சங்கா 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சாம் பில்லிங்ஸ் 64 ரன்களைச் சேர்த்தார்.