
BBL 2022: Adileide Strikers beat Hobart Hurricans by 7 wickets (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - ஹாபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஹரிக்கேன்ஸ் அணியில் டி ஆர்சி ஷார்டை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 19.5 ஓவர்களிலேயே ஹரிக்கேன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக டி ஆர்சி ஷார்ட் 32 ரன்களைச் சேர்த்தார். ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் பீட்டர் சிடில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.