
BBL 2022: Adileide Strikers defeat Melbourne Stars by 23 runs (Image Source: Google)
பிக் பேஷ் லீக் தொடரில் கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையேயான 39ஆவது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசியது. அதன்படி களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி ஜோனதன் வெல்ஸின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஜோனதன் வெல்ஸ் 73 ரன்களைச் சேர்த்தார். ஸ்டார்ஸ் அணி தரப்பில் ரெயின்பேர்ட், ஹிஞ்ச்லிஃப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.