
BBL 2022: Alex Hales unbeaten 80 helps Sydney Thunder's comfortable victory (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 44ஆவது போட்டியில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த ஹரிகேன்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கெலெப் ஜெவெல் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த பென் மெக்டர்மோட் 38 ரன்னிலும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 21 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியனுக்கு திரும்பினர்.