Advertisement

பிபிஎல் 2022: மெக்டர்மோட் காட்டடி; ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!

பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 08, 2022 • 21:19 PM
BBL 2022: Hobart Hurricanes beat Brisbane Heat by 8 wickets
BBL 2022: Hobart Hurricanes beat Brisbane Heat by 8 wickets (Image Source: Google)
Advertisement

பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 41ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் அந்த அணியின் லாச்லன் பிஃபர் மட்டும் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார்.

Trending


இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக லாச்லன் பிஃபர் 69 ரன்களைச் சேர்த்தார். 

அதன்பின் இலக்கை துரத்திய ஹரிகேன்ஸ் அணியிலும் கலெப் ஜெவெல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

ஆனால் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் மெக்டர்மோர் 61 பந்துகளில் 2 சிக்சர், 10 பவுண்டரிகளை விளாசி 93 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் 17.2 ஓவர்களில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement