
BBL 2022: Kerr has taken the Sixers into the final! (Image Source: Google)
பிக் பேஷ் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஏற்கெனவே பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் அடுத்ததாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் அணி எது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் இன்று சிட்னி சிக்சர்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்டிரைக்கர்ஸ் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஷார்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த இயன் காக்பின் - ஜானதன் வெல்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.