
BBL 2022: Melbourne Stars beat Adelaide Strikers by 5 wickets (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 43ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி ஜானதன் வெல்ஸின் அதிரடியான அரைசதம் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக் வெல்ஸ் 68 ரன்களைச் சேர்த்தார். ஸ்டார்ஸ் அணி தரப்பில் ஹாரிஸ் ராவுஃப், அஹ்மத், ஆடம் ஸாம்பா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.