
BBL 2022: Perth Scochers defeat Melbourne Stars by 50 runs (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி குர்டிஸ் பேட்டர்சனின் அபாரமான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக குர்டிஸ் பேட்டர்சன் 54 ரன்களையும், காலின் முன்ரோ 40 ரன்களையும் சேர்த்தனர். மெல்போர்ன் அணி தரப்பில் ஹாரிஸ் ராவுஃப், குயிஸ் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.