
BBL 2022: Sydney Sixers defeat Sydney Thunder by 60 runs (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 50ஆவது போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தண்டர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சிட்னி சிச்கர்ஸ் அணி ஜோஷ் பிலிப்பே, டேனியல் ஹூக்ஸ் ஆகியோரது அபார அரைசதத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக டேனியல் ஹூக்ஸ் 66 ரன்களையும், ஜோஷ் பிலிப்பே 57 ரன்களையும் சேர்த்தனர். தண்டர் அணி தரப்பில் டேனியல் சம்ஸ், மெக்கண்ட்ரூ தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.