
BBL: Pakistan Spinner Shadab Khan Acquired By Sydney Sixers (Image Source: Google)
பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சதாப் கான். இவர் பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 64 டி20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
அதேசமயம் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் தொடரின் சாம்பியன் அணியான சிட்னி சிக்சர்ஸ் அணியில் சதாப் கான் ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து இவர் எஞ்சியுள்ள பிபிஎல் ஆட்டங்களில் விளையாடுவார் என்று சிட்னி சிக்சர்ஸ் அணி உறுதிசெய்துள்ளது.