
BBL: Sydney Thunder's Opener In Isolation Due To Covid Scare Ahead Of Clash Against Brisbane Heat (Image Source: Google)
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 14ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து பிரிஸ்பேன் அணி இலக்கை துரத்தி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சிட்னி தண்டர் அணியின் தொடக்க வீரர் சாம் வைட்மேன் கரோனா விதிமுறைகளை மீறியதாக தனிமைப்படுத்தப்பட்டார்.