
BCB express desire to host 2025 Champions Trophy (Image Source: Google)
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 1998ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 8 சீசன்கள் நடத்தப்பட்டுள்ள இத்தொடரில் கடைசியாக 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த வங்கதேசம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதை அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜூமுல் ஹசன் தெரிவித்தார். போட்டியை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக 1998ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அறிமுக ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வங்கதேசம் தான் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.