
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில், இதற்கான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்று நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், வீரர்கள் உமிழ்நீரை பயன்படுத்துவதற்கான தடையை பிசிசிஐ நீக்கியுள்ளது. முன்னதாக கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) உமிழ்நீரை தடை செய்தது. ஆனால் அதன்பின் 2022 ஆம் ஆண்டில், ஐசிசி உமிழ்நீரைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடையை விதித்துள்ளது. இந்நிலையில் தான் பிசிசிஐ இந்த விதியை ஐபிஎல் தொடரில் நீக்கியுள்ளது.
இதுதவிர்த்து ஐபிஎல் போட்டியில் இரண்டாவது பந்தை இரண்டாவது இன்னிங்ஸின் 11வது ஓவருக்குப் பிறகு எடுக்கலாம். இந்த விதியின் முக்கிய நோக்கம், இரவு நேரப் போட்டிகளை பெரும்பாலும் பாதிக்கும் பனியின் விளைவைக் குறைப்பதாகும். இந்த விதியை அறிமுகப்படுத்துவது, டாஸ் வெல்லும் கேப்டனுக்கு எந்த நன்மையும் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என்ற் கூறப்பகிறது.
BCCI has reportedly removed the ban on using saliva to shine the ball! pic.twitter.com/fDKCcwbhrC
— CRICKETNMORE (@cricketnmore) March 20, 2025