Advertisement

ஐபிஎல் 2022: மைதான ஊழியர்களை கவுரவித்த பிசிசிஐ!

15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்த 6 மைதானங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் மைதான பராமரிப்பாளர்களுக்கு ரூ.1.25 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Advertisement
BCCI Announces A Big Prize Money Amount For Ground Staff At All Six IPL 2022 Venues
BCCI Announces A Big Prize Money Amount For Ground Staff At All Six IPL 2022 Venues (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 31, 2022 • 11:57 AM

15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்த ஆறு மைதானங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் மைதான பராமரிப்பாளர்களுக்கு ரூ.1.25 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி  சிசிஐ, வான்கடே, டிஒய் பாட்டீல் மற்றும் எம்சிஏ ஆகிய ஸ்டேடியங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மற்றும் நரேந்திர மோடி ஸ்டேடியத்துக்கு தலா ரூ.12.5 லட்சமும் பரிசுத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 31, 2022 • 11:57 AM

இதுபற்றி ஜெய் ஷா தனது ட்விட்டர் பதிவில், ''ஐபிஎல் 2022 தொடரில் சிறப்பான விளையாட்டை நமக்கு அளிக்க பேருதவியாக இருந்த புகழப்படாத ஹீரோக்களான கியூரேட்டர்கள் மற்றும் கிரவுண்ட்ஸ்மேன்களுக்கு ரூ. 1.25 கோடி பரிசுத் தொகை வழங்குவதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். ஐபிஎல் தொடர் முழுவதும் நடைபெற்ற ஆறு மைதானங்களை சேர்ந்தவர்களுக்கும் இந்தப் பரிசுத்தொகை பகிர்ந்து அளிகக்ப்படவுள்ளது. சிறந்த ஆட்டங்களை நாம் அனுபவிப்பதற்கு உறுதுணையாக இருந்து தங்களது உழைப்பை அவர்கள் கொட்டியுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending

முதல் முறையாக மைதான பராமரிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகை பிசிசிஐ வழங்குகிறது. கெரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த சீசன் முழுவதும் மும்பை மற்றும் புனே ஆகிய இரண்டு நகரங்களில் மொத்த லீக் போட்டிகளையும் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி மும்பையிலுள்ள வான்கடே, ப்ரபோர்ன், டிஒய் பாட்டில் ஆகிய மைதானங்களிலும் புணே எம்சிஏ மைதானத்திலும் என மொத்த நான்கு மைதானங்களில் லீக் போட்டிகள் அனைத்தும் நடைபெற்றன.

மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் எஞ்சியுள்ள மூன்று ப்ளே ஆஃப் மற்றும் இறுதிபோட்டிகளில் குவாலிஃபயர் 1, எலிமினேட்டர் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், குவாலிஃபயர் 2, இறுதிப்போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்திலும் நடைபெற்றது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement