
BCCI announces Annual Player Contracts for Indian Women's team (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று மகளிர் அணிக்கான வருடாந்திர வீராங்கனைகள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான வீராங்கனைகள் ஒப்பந்த பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
இதில், ஆடவர் அணியைப் போலவே வீராங்கனைகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அப்பகுதிகளில் அடிப்படையில் ஒப்பந்த தொகையானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏ பிரிவில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு ரூ. 50 லட்சமும், பி பிரிவில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளுக்கு ரூ.40 லட்சமும், சி பிரிவு வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சமும் ஒப்பந்த தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.