
BCCI Announces White-Ball Cricket Schedule Against Australia & South Africa (Image Source: Google)
நடப்பாண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் ஐசிசியின் ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து என அனைத்து நாடுகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
மேலும் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு அனைத்து நாடுகளும் டி20 கிரிக்கெட்டின் மீது அதிகபடினா கவனத்தை செலுத்தி, அடுத்தடுத்து டி20 தொடர்களை நடத்திவருகின்றன.
அந்தவகையில் பிசிசிஐயும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஐயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் என டி20 தொடர்களை நடத்தியது. இந்நிலையில் தற்போது உலகக்கோப்பை தொடருக்கு ஒத்திகைப் பார்க்கும் வகையில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடனான டி20 தொடரின் அட்டவணையை இன்று பிசிசிஐ வெளியிட்டுள்ளது.