
BCCI Confirms Venues For IPL 2022 Playoffs, IND v SA T20I Series & Schedule Of Women's T20 Challenge (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் ஜூன் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் ஜூன் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. 2ஆவது போட்டி கட்டாக்கில் ஜூண் 12ஆம் தேதி, 3ஆவது போட்டி விசாகப்பட்டினத்தில் ஜூன் 14ஆம் தேதி, 4ஆவது போட்டி ராஜ்கோட்டில் ஜூன் 17ஆம் தேதி, 5ஆவது போட்டி பெங்களூருவில் ஜூன் 19ஆம் தேதியும் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்களை பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார் .