
BCCI Implements Compensation Package And Fee Hikes For Domestic Cricketers (Image Source: Google)
கடந்த ஆண்டு நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் இருந்ததையடுத்து முதல் முறையாக ரஞ்சிக் கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரஞ்சிக் கோப்பையை நம்பி இருந்த ஏராளமான வீரர்களுக்கு ஊதியம் கிடைக்காமல் பெரும் நிதிச் சிக்கலில் வாடினர்.
இதையடுத்து, கடந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத வீரர்களுக்கு நிதியுதவியும், அடுத்த சீசனுக்கான ஊதிய உயர்வையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ட்விட்டர் பதிவில், “கடந்த 2019-20ஆம் ஆண்டு சீசனில் உள்நாட்டுப் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு கூடுதலாக 50 சதவீதம் இழப்பீடு 2020-21ஆம் ஆண்டு சீசனில் வழங்கப்படும். வரும் சீசனுக்கும் வீரர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.