
இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை முதல் ஆக்லாந்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடரே இன்னும் முடிவடையாத சூழலில் அடுத்த தொடருக்கான பிரச்சினை கிளம்பியுள்ளது.
இந்திய அணி அடுத்ததாக வரும் ஜனவரி மாதத்தில் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதும், அதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ரவீந்திர ஜடேஜா மற்றும் யாஷ் தயால் ஆகிய இருவரும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினர். அணியில் ஸ்பின்னர்களும் இருப்பதால், நல்ல ஃபார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இடம்பெறுவார் என ரசிகர்கள் நம்பினர்.