Advertisement

இங்கிலாந்து தொடரில் கூடுதலாக 2 டி20 போட்டிகள் - பிசிசிஐ விருப்பம்!

மான்செஸ்டர் டெஸ்ட் ரத்தானதற்குப் பதிலாக அடுத்த வருடம் இரு டி20 ஆட்டங்கள் அல்லது ஒரு டெஸ்டை விளையாட பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 14, 2021 • 13:40 PM
BCCI Offers ECB Two Extra T20Is In England In 2022 Tour
BCCI Offers ECB Two Extra T20Is In England In 2022 Tour (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்கள். 

அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். இதையடுத்து மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்த 5ஆவது டெஸ்ட் போட்டி ரத்தானது.

Trending


இந்நிலையில் அடுத்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. அப்போது ரத்தான 5ஆவது டெஸ்ட் விளையாடப்படும் என அறியப்பட்டது. இந்நிலையில் ரத்தான டெஸ்டுக்குப் பதிலாகக் கூடுதலாக இரு டி20 ஆட்டங்களில் விளையாட பிசிசிஐ முன்வந்துள்ளது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதுபற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது,“அடுத்த வருடம் ஜூலை மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கிறபோது கூடுதலாக இரு டி20 ஆட்டங்களில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளோம். மூன்று டி20 ஆட்டங்களுக்குப் பதிலாக 5 டி20 ஆட்டங்களில் விளையாடலாம். அல்லது ஒரு டெஸ்டில் விளையாடவும் எங்களுக்குச் சம்மதமே. இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்பது இங்கிலாந்தின் விருப்பம்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement