
மெகா ஏலத்தின் மூலம் கோலகலமாக நடைபெற்ற ஐபிஎல் தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி நடைபெற்றது. இந்நிலையில் அடுத்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் குறித்தும் அதன் ஏலம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் அணிகளும் சிறிய மாற்றத்தை செய்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மினி ஏலம் நடத்தப்படும். இதில் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை ட்ரேடிங் மூலம் கைமாற்றிக்கொள்ளலாம். இல்லையெனில் புதிய வீரர்களை வாங்கிக்கொள்ளலாம். அந்தவகையில் அடுத்த மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதியன்று நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மினி ஏலத்தின் தேதி கிட்டத்தட்ட உறுதியான போதும், எந்த இடத்தில் நடைபெற போகிறது என்பது குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. கடந்தாண்டு ஒவ்வொரு அணிக்கும் ரூ.90 கோடி செலவளித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அடுத்தாண்டிற்கு ரூ. 5கோடி உயர்த்தி ரூ.95 கோடி பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.