
BCCI President Ganguly discharged from hospital after recovering from COVID-19 (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 28ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
லேசான அறிகுறிகளுடன் கரோனா உறுதி செய்யப்பட்ட கங்குலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சவுரவ் கங்குலி கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.