உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கங்குலி, ஜெய் ஷா வுக்கு அனுமதி மறுப்பு!
இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நேரில் காண பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும், செயலாளர் ஜெய் ஷாவும் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறுகிறது. இதன் பின்பு இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த சுற்றுப் பயணத்துக்கு இந்திய வீரர்கள் மும்பையில் இருக்கும் பிசிசிஐ விடுதியில் 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி வீரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களும் தங்களுடன் அழைத்து வர இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Trending
இது குறித்து பேசிய பிசிசிஐ அலுவலர் ஒருவர்“இங்கிலாந்துக்கு குடும்பத்தினருடன் வருவதற்கு அனுமதியளித்த பிரிட்டன் அரசாங்கத்துக்கு நன்றி. குடும்பத்துடன் இருப்பது வீரர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், வீரர்களின் நல்ல மன நிலைக்கு அது உதவும். அதேபோல இந்தப் போட்டியை நேரில் காண பிசிசிஐயின் தலைவர் கங்குலியும், செயலாளர் ஜெய் ஷாவும் செல்லவில்லை.
ஏனெனில் எனக்கு தெரிந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அவர்கள் வருவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. ஏனென்றால் நேரில் செல்வதற்கு முன்பு பயோ பபுள் முறையை கடைபிடிக்க வேண்டும். அம்முறையில் நிறைய நாள்கள் வீணாகும் என்பதால் இருவரும் போட்டியை காண நேரில் செல்லவில்லை” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now